கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை மனு…. வாபஸ் பெற அனுமதி…

சென்னை, அக்டோபர்-14

தூத்துக்குடி மக்களவை தேர்தலில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் தேர்தலில் தோல்வியடைந்தார். இந்த நிலையில் கனிமொழியின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி தமிழிசை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தமது தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது ஆனால், அதனை தேர்தல் அதிகாரி கண்டுகொள்ளவில்லை. இதனால், கனிமொழியின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என தமிழிசை கூறியிருந்தார். இதற்கிடையே, தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டு பதவியேற்றார். ஆளுநராக பதவியேற்றதால் வழக்கை தொடரமுடியாது என்றும், வழக்கை திரும்பப்பெறுவதாகவும் தமிழிசை மனு அளித்திருந்தார். இந்த நிலையில், வழக்கை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் தமிழிசைக்கு அனுமதி அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *