தமிழகத்தில் புதிதாக 5,986 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 5,986 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,61,435 -ஆக அதிகரித்துள்ளது.

சென்னை, ஆகஸ்ட்-20

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 61 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 283 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 742 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 01 ஆயிரத்து 913 ஆக உயர்ந்துள்ளது.

வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 116 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 239 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *