தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தால், தயாரித்தால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்.. மாவட்ட எஸ்.பி.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தாலோ, தயாரித்தாலோ குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி, ஆகஸ்ட்-20

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே பிரபல ரவுடி துரைமுத்து, வெடிகுண்டு வீசியதில், காவலர் சுப்பிரமணியன் (26) தலைசிதறி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வெடிகுண்டு வெடித்ததில் துரைமுத்துவும் இறந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் யாரேனும் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தால், தயாரித்தால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். போதைப்பொருட்களை விற்றாலும், வைத்திருந்தாலும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.மேலும், கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தலை தடுக்க மாவட்டத்தில் 3 தனிப்படைக்கள் அமைத்து கண்காணிக்கப்படுவதாக எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *