2வது தலைநகரமாக மதுரை வேண்டும்.. அமைச்சர் ராஜேந்திரபாலாஜியும் ஆதரவு..!

சென்னை, ஆகஸ்ட்-20

தமிழ்நாட்டில் 2வது தலைநகரை மதுரையில் அமைக்க வேண்டும் என்று அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் முதலில் கூறினார். அதற்கு அமைச்சர் செல்லூர் ராஜுவும் ஆதரவு தெரிவித்தார். ஆனால் 2வது தலை நகரை திருச்சியில் தான் அமைக்க வேண்டும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் குரல் எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், மதுரையில் 2வது தலைமை செயலகம் அமைக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்ததாவது ;-

தமிழகத்தின் வளர்ச்சி அன்றிருந்த மக்கள் தொகையை விட தற்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது. 8 கோடி மக்கள் உள்ள தமிழகத்தில் தென்பகுதியான மதுரையில் ஒரு தலைநகரம் உருவானால் தென்மாவட்ட மக்களுக்கு வசதி, வாய்ப்பாக இருக்கும். மதுரை என்பது மன்னர் தலைநகரமாக கொண்டு ஆண்ட பூமி. ஆகவே மதுரையை தலைநகரமாக கொண்டு ஒரு தலைமை செயலகம் அமைந்தால் அது இப்பகுதி மக்களுக்கு மிகவும் பயன்பெறக்கூடியதாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *