யாருக்கு ஆண்மை இருக்கு?.. விநாயகர் சதுர்த்தியால் மோதிக்கொண்ட அதிமுக – பாஜக..!

சென்னை, ஆகஸ்ட்-20

விநாயகர் சதுர்த்தி விழா, வருகிற 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. வழக்கமாக இந்து அமைப்புகள் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு கொரோனா தாக்கம் இருப்பதால் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “சென்னையிலும் டாஸ்மாக் திறக்கப்பட்டு விட்டது. இதனால் கொரோனா வராதாம். ஆனால், விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து 5-10 பேர் சமூக இடைவெளியோடு விசர்ஜனம் செய்தால் கொரோனா வந்துடுமாம். பகுத்தறிவு. கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு” என்று ஹெச்.ராஜா விமர்சனம் செய்திருந்தார்.

ஹெச்.ராஜாவின் இந்த ட்விட்டர் பதிவுக்கு அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப நிர்வாகி கோவை சத்யன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆண்மை என்பது யாதெனில் சாரணர் தேர்தலில் வெற்றி பெறுதல். நவீன திருவள்ளுவர்.” என்று பதிவிட்டுள்ளர்.

இதையடுத்து அந்த ட் வீட்டை ஷேர் செய்த அதிமுக ஐடி பிரிவு செயலாளர் ராஜ் சத்யன், நீதிமன்றத்தை பழித்துப்பேசி பின் அட்மின் தவறென்று பதுங்கிய போதே உங்கள் ஆண்மை தெரியும் எங்களுக்கு, மக்கள் பணியை மகேசன் பணியாக ஆற்றும் அம்மா அரசுக்கு சர்மாக்களின் சான்று தேவையில்லை, சுயேச்சையாக 999 ஓட்டுக்கு மேல் வாங்கி மக்களிடத்தில், உங்கள் அரசியல் ஆண்மையே நிரூபியுங்களேன் @HRajaBJP” இவ்வாறு தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *