இந்தியாவில் கொரோனா பாதிப்பு 28.36 லட்சத்தை கடந்தது..!

நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 53 ஆயிரத்தை தாண்டியது.

டெல்லி, ஆகஸ்ட்-20

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 28,36,926 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 69,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 977 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53,866 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,37,871ல் இருந்து 20,96,665 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,86,395 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.9 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 73.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *