உலகளவில் கொரோனா பாதிப்பு 2.25 கோடியாக உயர்வு.!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.90 லட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 2.25 கோடி பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

ஆகஸ்ட்-20

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.25 கோடியைத் தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் 22,568,287 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 15,297,417 பேர் குணமடைந்துள்ளனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த 7,90,788 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். மேலும், 6,480,082 பேர்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 61,762 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 176,337 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,700,931 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 111,189 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,460,413 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,835,822 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 53,994 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 2,096,068 பேர் குணமடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *