இந்தி படிக்க விருப்பமா? என மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் கேள்வி.. கோவை மாநகராட்சி ஆணையர் விளக்கம்

இந்தி மொழி படிக்க விருப்பமா? என தற்போதைய மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் இடம்பெறவில்லை என்று கோவை மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

கோவை, ஆகஸ்ட்-19

கோவை மாநகராட்சி பள்ளிகளில் முதல் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் 3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா? என கேள்வி கேட்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்ததையடுத்து, கோவை மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து பதிலளித்த கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார், ‘இந்தி மொழி படிக்க விருப்பமா? என தற்போதைய மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் கேட்கப்படவில்லை. கடந்த மே 29 ஆம் தேதி இந்த கல்வியாண்டிற்கான விண்ணப்பப் படிவத்தை வெளியிட்டோம். தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் விண்ணப்பப் படிவம் இந்த ஆண்டிற்கான படிவம் அல்ல. மேலும், சர்ச்சைக்குரிய விண்ணப்பப் படிவம் நான் பதவியேற்றபின் வெளியிடப்படவில்லை’ என்று விளக்கம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *