தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பின்பே பள்ளிகள் திறக்கப்படும்.. அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பின்பே பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு, ஆகஸ்ட்-19

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், பள்ளிகள் திறப்பு குறித்து நேற்று ஆலோசனை எதுவும் நடத்தப்படவில்லை. பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. கொரோனா குறைந்த பின்பு நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட துறைகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் பழனிசாமி இறுதி முடிவெடுப்பார். ஆசிரியர் தகுதித்தேர்வில் தற்போதைய நடைமுறை தொடரும் என்றும் அதில் மாற்று வழிக்கு வாய்ப்பே இல்லை என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *