அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை.. மு.க.ஸ்டாலின்

அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஆகஸ்ட்-19

தூத்துக்குடியில் ரவுடி துரைமுத்துவை கைது செய்யும் முயற்சியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு காவலர் சுப்பிரமணியன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூபாய் 50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் எடப்படி பழனிசாமி அறிவித்துள்ளார். இதனிடையே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் உருவப்படத்திற்கு நெல்லை சரக டிஐஜி அலுவலகத்தில் டிஜிபி திரிபாதி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டரில், “தூத்துக்குடியில், காவலர் சுப்பிரமணியன் நாட்டு வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பணியில் உயிரிழந்த காவலருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து – அவரது குடும்பத்திற்கு அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அ.தி.மு.க. ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் இருக்க, பணியில் இருக்கும் காவலர்களின் பாதுகாப்பினைத் தமிழகக் காவல்துறை உறுதிசெய்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.’ என்று தெரிவித்துள்ளார்.” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *