இந்தியாவில் கொரோனா பாதிப்பு 27.67 லட்சமாக உயர்வு.. குணமடைந்தோர் எண்ணிக்கை 20.37 லட்சமாக அதிகரிப்பு..!

நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27.67 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 52 ஆயிரத்தை தாண்டியது.

டெல்லி, ஆகஸ்ட்-19

நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் இதுவரை 27,67,274 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 64,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1092 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52,889 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 20,37,871 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,76,514 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.9 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 73.6 சதவீதமாகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *