வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு செய்ய உள்ளார். கொரோனா தடுப்புப்பணிகளை ஆய்வு செய்த பின் விவசாயிகள், தொழில் துறையினருடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை, ஆகஸ்ட்-19

கோவை, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்துள்ள நிலையில் நாளை வேலூர் மாவட்டம் செல்கிறார். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு செய்கிறார். கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த பின் விவசாயிகள், தொழில்துறையினருடன் முதலமைச்சர் ஆலோசனை செய்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *