மாலி நாட்டில் ராணுவ புரட்சி..பதவியை ராஜினாமா செய்தார் அதிபர் இப்ராஹிம் பவுபகர்.!!

மாலி நாட்டு அதிபர் இப்ராஹிம் பவுபகர் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பமாகோ, ஆகஸ்ட்-19

மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடன மாலியில், ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளது. ராணுவ கிளர்ச்சியாளர்கள் தெருக்களில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுக்கொண்டே சென்றனர். ராணுவ டாங்கிகள் நகரத்தில் வலம் வருகின்றன. அதிபர் இப்ராஹிம் பவுபக்கர், பிரதமர் பவ் சிஸ்சே ஆகியோரை ராணுவ கிளர்ச்சியாளர்கள் கைது செய்து தலைநகர் பமாகோ அருகில் உள்ள ராணுவ முகாமிற்கு கொண்டு சென்றனர். இதனால் மாலியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

ராணுவ கிளர்ச்சியாளர்கள் அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் பவுபக்கர், பிரதமர் பவ் சிஸ்சே ஆகியோரை துப்பாக்கி முனையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அரசு நிர்வாகத்தையும் கைப்பற்றினர். அதிபர் இப்ராஹிம், பிரதமர் பவ் சிஸ்சே ஆகியோர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, மாலி அதிபர் இப்ராகிம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தெடார்பாக அவர் தொலைக்காட்சியில் பேசும்போது, தனது தலைமையிலான ஆட்சியையும், பாராளுமன்றத்தையும் கலைப்பதாக அறிவித்தார். மேலும், நான் அதிகாரத்தில் நீடிப்பதற்காக எந்த ரத்தமும் சிந்தக்கூடாது என்று விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *