அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர், திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா.!
சென்னை, ஆகஸ்ட்-18

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவி மற்றும் அவரது மகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மூன்று பேரும் இன்று மாலை 6 மணி அளவில் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல திமுக எம்எல்ஏவும், முன்னாள், போக்குவரத்து துறை அமைச்சருமான செந்தில் பாலாஜிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.