தமிழகத்தில் புதிதாக 5,709 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று புதிதாக 5,709 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 121 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை, ஆகஸ்ட்-18

தமிழகத்தில் இன்று புதிதாக 5,709 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 3,49,654 ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று 67,025 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் இன்று 5,709 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 3,49,654 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஆண்கள் 2,10,953, பெண்கள் 1,38,672, திருநங்கைகள் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 5,850 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக 2,89,787 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 53,860 பேர் உள்ளனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 121 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 32 பேரும், அரசு மருத்துவமனையில் 89 பேரும் அடங்குவர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,007 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *