தூத்துக்குடி: வெடிகுண்டு வீச்சில் காவலர் பலி… வெடிகுண்டு வீசிய ரவுடியும் உயிரிழப்பு!

தூத்துக்குடி முறப்பநாடு அருகே வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் காவலர் உயிரிழந்துள்ள நிலையில், ரவுடியும் பலியாகினார்.

தூத்துக்குடி, ஆகஸ்ட்-18

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மனக்கரை வனப்பகுதி முறப்பநாடு அருகே ஸ்ரீவைகுண்டம் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக குற்றவாளி ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது காவலர்கள் மீது குற்றவாளி துரைமுத்து வெடிகுண்டு வீசி உள்ளார். இதில் காவலர் சுப்ரமணியம் என்பவர் பலியானார். அவரது உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் ஒரு காவலர் காயம் அடைந்து உள்ளார். வெடிகுண்டு வீசியபோது ரவுடி துரைமுத்துவும் படுகாயம் அடைந்து உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *