நிர்மலா சீதாராமன் பிறந்த நாள்.. அமைச்சர் வேலுமணி வாழ்த்து..!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் 61 வது பிறந்த நாளையொட்டி, அவருக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை, ஆகஸ்ட்-18

இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் 61 வது பிறந்த நாள். உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்திரா காந்திக்கு பிறகு நிதியமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற பொறுப்புகளை ஏற்றிருக்கும் முதல் பெண்மணி நிர்மலா சீதாராமன் மட்டுமே. அதிலும், இந்திரா இரண்டு அமைச்சகங்களிலும் கூடுதல் பொறுப்பு தான் ஏற்றிருந்தார் என்பது குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.
இந்நிலையில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பதிவில், ”மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி
நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் தொடர்ந்து பொதுச் சேவையில் ஈடுபட எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.” என தெரிவித்துள்ளார்.