அண்ணன் எடப்பாடியாரை முதல்வராக்குவோம்.. திமுகவில் இணைந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர் லட்சுமணன் உளறல் பேச்சு..!

சென்னை, ஆகஸ்ட்-18

அதிமுக அமைப்புச் செயலாளரும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.பி.யும், ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான டாக்டர் இரா.இலட்சுமணன், இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், தற்பொழுது நானும் முக்கிய நிர்வாகிகள் 15 பேர் கலந்து கொண்டு இணைந்துள்ளோம். கொரோனா நோய்ப் பரவல் குறைந்த பின், 5 ஆயிரம் 10 ஆயிரம் பேரை திரட்டிக் இணைப்பு விழாவை நடத்த உள்ளோம். என்னை அரவணைத்து கழக பணி ஆற்றிட கழகத் தலைவர் ஸ்டாலின் திமுகவில் இணைத்ததற்கு அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி அவர்களுக்கும், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் முன்னாள்அமைச்சர்பொன்முடி அவர்களுக்கும், கழகப் பொருளாளர் அவர்களுக்கும் தலைமை கழக நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்த கொள்கிறோம். இனி திமுக தலைவர் வழிகாட்டுதலின்படி ஆலோசனையும் தீவிரமாக பணியாற்றி வரும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மாண்புமிகு தளபதி அவர்கள் முதல்வராக அரியணை ஏற அயராது பாடுபடுவோம். தமிழக அரசு வலுவான தலைமையின் கீழ் அமையவேண்டும். எனவேதான் நான் திமுகவில் என்னை இணைத்துக் கொண்டேன்.எந்தப் பதவியும் எதிர்பார்த்து நான் வரவில்லை என்று கூறினார்.

பேட்டியின் நடுவே பழக்க தோஷத்தில், 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அண்ணன் எடப்பாடியாரை முதல்வர் ஆக்குவதாக கூறி பின்னர் மாண்புமிகு தளபதி அவர்களை முதல்வராக ஆக்குவோம் என்று கூறியுள்ளார். இதனால் அறிவாலயத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *