இந்தியாவில் கொரோனா பாதிப்பு 27 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 27 லட்சத்தை தாண்டி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 55,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 876 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லி, ஆகஸ்ட்-17

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 27,02,743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 55,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 876 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51,797 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 19,77,780 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,73,166 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.9 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 73.2 சதவீதமாகவும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *