உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், இன்று காலை திடீரென எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

டெல்லி, ஆகஸ்ட்-18

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சமீபத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார். எனினும், வீட்டில் அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

இந்த நிலையில், இன்று அவர் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோர்வு மற்றும் உடல் வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் இருந்தவாறே பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *