ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தீர்ப்பு மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.. வைகோ

“ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நீதிக்கு கிடைத்த வெற்றி. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு கிடைத்த வெற்றி” என்று மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை, ஆகஸ்ட்-18

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், வேதாந்தா குழுமத்தின் ஆலையான ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் சிவஞானம் அவர்களும், நீதியரசி பவானி சுப்புராயன் அவர்களும் வழங்கியுள்ள தீர்ப்பு நீதிக்கு கிடைத்த வெற்றி, மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. அனைத்து தரப்பு மக்களின் போராட்டத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய வெற்றி, 13 உயிர்கள் பலியாயிற்றே.. அவர்கள் சிந்திய ரத்தத்திற்கு கிடைத்த நீதி என்றே கருதுகிறேன். கடந்த 26 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் இடைவிடாமல் போராடி வரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு இதைவிட மகிழ்ச்சியான செய்தி இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *