ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை .. நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்!!

ஸ்டெர்லைட் வழக்கு தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி, ஆகஸ்ட்-18

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு 815 பக்க தீர்ப்பை வழங்கியது. நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், ‘ தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும். ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும் என தீர்ப்பு வெளியானதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆலையை திறப்பதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்து இந்த வெற்றியை கொண்டாடினர்.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா மேல்முறையீடு செய்ய முடிவு எடுத்துள்ளது. மேல்முறையீடு செய்யும் வரை தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரியத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *