வெளியானது ”பிகில்” ட்ரெய்லர்-ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை, அக்டோபர்-12

விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள முன்றாவது திரைப்படம் பிகில். வருகிற தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது. பெண்கள் கால்பந்து விளையாடுவதை மையமாககொண்டு பிகில் கதைகளம் அமைக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள பிகில் திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். படம் குறித்த அறிவிப்பு வெளியான நாள் முதலே ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

பிகில் ட்ரெய்லர் வெளியீடு…

இந்த நிலையில், பிகில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே விஜய் இந்த திரைப்படத்தில் இரு வேடங்களில் நடித்துள்ளார் என்று கூறப்பட்டது. 2.45 நிமிடங்கள் அடங்கிய ட்ரெய்லர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரை விஜய் ரசிகர்கள் அனைவரும் பார்த்துகொண்டாடி வருகின்றனர். டிரெய்லர் வெளியான சிறிது நேரத்திலேயே இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *