ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டம்.. சீமான் மீது பாய்ந்தது வழக்கு..!
ஊரடங்கு விதிகளை மீறி புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, ஆகஸ்ட்-17

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் முன்பு சீமான் மற்றும் அவரது கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமூகநீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் என அந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. தனிமனித இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்தபடி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சீமான் மற்றும் அந்த கட்சியை சேர்ந்த 20 பேர் மீது மதுரவாயல் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில், நேற்று முழு ஊரடங்கை மீறி ஆட்களை கூட்டி போராட்டம் நடத்தியதாக சீமான் உட்பட30 பேர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.