கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்பி வசந்தகுமாருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை.. கே.எஸ் அழகிரி
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி எம்பி வசந்தகுமாருக்கு தற்போது வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எம்பி வசந்தகுமார் விரைவில் மீண்டு வர வேண்டும் என கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை, ஆகஸ்ட்-17

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது;-

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொள்ள உள்ளோம். ஆகஸ்ட் 20ம் தேதி முதல் காங்கிரஸ் கட்சி தேர்தல் பரப்புரையை தொடங்கிறது. 234 தொகுதிகளிலும் பணியாற்ற காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. முன்னாள் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கு பணியாற்ற 2 தொகுதிகள் ஒப்படைக்கப்படும். மேலும், மற்ற மாநிலங்களை போல் தமிழகத்தில் கொரோனா பரவலை ஏன் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை? அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிகளை பொழுது போக்காக செய்கிறது. கொரோனா கட்டுப்பாட்டு பணிகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை தர வேண்டும்.
மதுரையை 2வது தலைநகராக்குவது சிறந்த முடிவு. இதனால், தென் தமிழகம் வளர்ச்சி பெறும் என்றார். கொரோனா பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எம்பி.வசந்தகுமார் விரைவில் மீண்டு வரவேண்டும்.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.