பீகார் மாநிலத்தில் செப்டம்பர் 6-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு..!
பீகார் மாநிலத்தில் செப்டம்பர் 6-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலங்கள் 50% ஊழியர்களுடன் செயல்பட அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பாட்னா, ஆகஸ்ட்-17

பீகாரில் தற்போது வரை 1,03,383 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது. பீகாரில் மாநில அரசு அமல்படுத்தி இருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில், செப்டம்பர் 6ம் தேதி வரை முழு ஊரடங்கை நீட்டிப்பதாக நிதீஷ் குமார் அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் நிதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பீகார் அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,” பீகார் மாநிலத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, அதிகாரங்களைப் பயன்படுத்துவதில், மேற்கண்ட அறிவுறுத்தல்கள் உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டது. உள்துறை அமைச்சக உத்தரவின் தொடர்ச்சியாக, ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் 06.09.2020 வரை நடைமுறையில் இருக்கும். பீகாரில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், மால்கள், மத இடங்கள், பூங்காங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் என அனைத்தும் செப்டம்பர் 6ம் தேதி மூடப்படும். அதே சமயத்தில் அத்தியாவசிய பணிகள் மட்டும் வழக்கம் போல் செயல்படும்.அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படும். ரயில் மற்றும் விமான சேவைகள் செயல்படும். பேருந்து சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.’எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.