செப்டம்பர் 1 ஆம் தேதி காவலர்கள் தினமாக கொண்டாடப்படும்.. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களை கௌரவிக்கும் பொருட்டு, செப்டம்பர் 1 ஆம் தேதி காவலர்கள் தினமாக கொண்டாடப்படும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா, ஆகஸ்ட்-17

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள், அரசு அதிகாரிகள் முன்களப் பணியாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கு மரியாதை செலுத்தும் விதமாக செப்டம்பர் 1 ஆம் தேதி காவலர்கள் தினமாக கொண்டாடப்படும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுநோய் காலத்தில், சட்டம்- ஒழுங்கு பிரச்னைகளை கையாள்வதில் தங்கள் உயிரை பணயம் வைத்து காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். காவல்துறையினர் பலர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது சேவையை நாங்கள் மதிக்கிறோம் என முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *