எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.. மருத்துவமனை அறிக்கை

கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை, ஆகஸ்ட்-17

பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டு வருகிறார்.

இன்று வெளியிட்ட வீடியோவில் எஸ்.பி.பி. முன்பை விட இப்போது கொஞ்சம் நன்றாகவே மூச்சு விடுகிறார். இதை மருத்துவர்கள் நல்ல முன்னேற்றமாக பார்க்கிறார்கள். தற்போது குணமடைந்து வருகிறார். நிச்சயம் குணமடைந்து வீடு திரும்புவார். தொடர்ந்து அவருக்காக பிரார்த்திப்போம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி. பாலசுப்ரமணியம் தொடர்ந்து உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவ வல்லுநர்கள் குழு அவருக்கு சிகிச்சையளித்து வருகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *