தமிழகத்தில் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா.. 120 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று புதிதாக 5,890 பேர் கொரோனா தொற்றால பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 120 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை, ஆகஸ்ட்-17

தமிழகத்தில் இன்று புதிதாக 5,890 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 3,43,945 ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் இன்று 67,532 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 5,890 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 3,43,945 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஆண்கள் 2,07,508, பெண்கள் 1,36,408, திருநங்கைகள் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 5,667 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக 2,83,937 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 54,122 பேர் உள்ளனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 120 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 36 பேரும், அரசு மருத்துவமனையில் 84 பேரும் அடங்குவர். உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,886 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *