இந்தியாவில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை பாஜக, ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது… ராகுல் காந்தி
இந்தியாவில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி, ஆகஸ்ட்-16

இது தொடர்பாக அவர் ஒரு பத்திரிகையை செய்தியை மேற்கோள் காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இந்தியாவில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது. சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. ஃபேஸ்புக்கின் உண்மை நிலையை அமெரிக்க ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன’’ என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.