கிராமங்களிலும் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.. அமைச்சர் S.P.வேலுமணி

நகர்புறத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதை போல கொரோனா விழிப்புணர்வு பிரசாரங்களை கிராமப்புற பகுதிகளிலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளவேண்டும் என்று அமைச்சர் வேலுமணி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை, ஆகஸ்ட்-16

நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், கொரோனா வைரஸ் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர், முதலமைச்சர் அறிவுறித்தியபடி கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் கைகளை அவ்வப்போது சுத்தமாக கழுவி பாதுகாப்புடன் இருப்பதே சிறந்த வழியாகும்.
இதில் முதலமைச்சர் பொதுமக்களிடையே இந்நோய் தொற்று பரவுதலை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசின் சார்பிலும் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பிலும் துண்டுப்பிரசுரங்கள், வீடியோ குறும்படங்கள், வானொலிகள் மற்றும் எல்இடி திரை வீடியோ வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதை போல் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் பிற மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், ஏரி, குளம், குட்டை போன்ற நீர் நிலைகள் மற்றும் வரத்து கல்வாய்கள் அனைத்தையும் சரியான முறையில் பராமரித்து பருவமழையை சேகரிக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம், ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித் திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் 1520 கி.மீ. நீள சாலைப் பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் 3500 கி.மீ. நீள ஊரக சாலைகள் மேம்படுத்தும் பணிகளை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளேன். அம்ருத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் 11 குடிநீர் திட்டப் பணிகள், 12 பாதாள சாக்கடைத் திட்டப்பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்துள்ளேன். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் ஜல் ஜீவன் திட்டப்பணிகள், பெரிய கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் & பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளேன்.

சென்னை நெம்மேலியில் மேற்கொள்ளபப்ட்டு வரும் 150MLD திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்கவும், #MGNREGS திட்டப்பணிகளில் நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகள் மற்றும் இயற்கை வள மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், பருவ மழை காலங்களில் பொழியும் மழை நீரை ஒரு துளியும் வீணாக்காமல், பயன்படுத்த வேண்டும் என்பதற்காக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் புணரமைக்கப்பட்ட நீர்நிலைகளை முறையாக பராமரித்து மழை நீரை சேகரிக்க உத்தரவிட்டுள்ளேன்.
துண்டு பிரசுரங்கள், வீடியோ குறும்படங்கள், வானொலி மற்றும் எல்இடி திரை வீடியோ வாகனங்கள் உள்ளிட்டவை மூலம் சென்னையில் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வரும் விழிப்புணர்வு முறைகளை பிற மாவட்டங்களிலும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன். தனிமைப்படுத்தும் மையங்களை அதிகரித்தல், குடிசைப் பகுதிகளுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் சிறப்பு திட்டங்கள், சமூக களப்பணி திட்டம் மூலம் விழிப்புணர்வு, நுண்திட்டங்கள் & சிகிச்சைக்கு தேவையான வசதிகள் போன்றவை அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டதால் சென்னையில் தொற்று குறைந்து வருகிறது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் #COVID19 தொற்றை கட்டுப்படுத்த பரிசோதனைகளை அதிகரிக்கவும், காய்ச்சல் சிறப்பு முகாம்களை நடத்தவும், வீடுகள் தோறும் சென்று தொற்று அறிகுறி உள்ளவர்களை கண்டறிய 12000 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *