சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்… சீமான்
தமிழக சட்டமன்ற நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் எனவும், தானும் போட்டியிடுவதாகவும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை, ஆகஸ்ட்-16

புதிய கல்வி கொள்கைக்கு எதிராக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக சென்னையில் உள்ள தனது வீட்டின் முன் நின்று சீமான் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான், இந்தியை இந்தியா என்ற கட்டமைப்பிற்குள் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியை போல் தமிழையும் நாடெங்கும் படிக்க சொல்வார்களா? என அவர் கேள்வி எழுப்பினார்.
பின்னர் அவரிடம் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்றும் தானும் போட்டியிடுவேன் என்றும் அவர் பதிலளித்தார்.