தமிழகத்தில் புதிதாக 5,950 பேருக்கு கொரோனா..!

தமிழகத்தில் இன்று புதிதாக 5,950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 125 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை, ஆகஸ்ட்-16

தமிழகத்தில் இன்று 5,950 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 3,38,055 ஆக உயர்ந்துள்ளது. இன்று அரசு மருத்துவனைகளில் 86 பேர், தனியார் மருத்துவமனைகளில் 39 பேர் என 125 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5766 ஆக உயர்ந்துள்ளது.

  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 2,78,270 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 6,019 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 125 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 5,766- ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 1,196 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,16,650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 135 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 54,019 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை 37,11,246 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 82.31% ஆக உள்ளது.
  • தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 70,450 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 5,950 பேருக்கு தொற்று உறுதியானது.
  • இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2,03,838 ஆண்கள், 1,34,188 பெண்கள், 29 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *