சுயமரியாதை உள்ளவர்கள் திமுகவில் இருக்காதீர்கள்.. எச்.ராஜா அதிரடி பேட்டி..!

சுயமரியாதை, கவுரவம் உள்ளவர்கள் தி.மு.க.,வில் இருக்க முடியாது. தேசபக்தியோடு வாருங்கள் ஒன்றிணைவோம்’ என பா.ஜ.,தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

காரைக்குடி, ஆகஸ்ட்-16

இது தொடர்பாக காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

தி.மு.க., மூழ்குகின்ற கப்பல். இதைத்தான் அழகிரி கூறியுள்ளார். சுயமரியாதை உள்ளவர்கள், கவுரவமானவர்கள் தி.மு.க.,வில் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. உதயநிதிக்கு சலாம் போடுபவர்கள் தான் தி.மு.க.,வில் இருக்க முடியும்.சுயமரியாதை உள்ளவர்கள் அந்த கட்சியில் இருக்காதீர்கள். சுயமரியாதையோடு, தேசபக்தியோடு வாருங்கள் ஒன்றிணைவோம் என்று அவர்களை அழைக்கிறேன்.பன்மொழித் தன்மையை பராமரிக்கும் விதத்தில் தேசிய கல்வி கொள்கை கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்ப்பவர்கள் சர்வாதிகார தன்மை கொண்டவர்கள்.விநாயக சதுர்த்தி விழா சமுதாய ஒற்றுமை விழாவாக கொண்டாப்படுகிறது. இதற்கு அரசு தடை விதித்திருப்பது ஏற்புடையது அல்ல. மதுரை ஆவணிமூலத் திருவிழாவிற்கு இணை ஆணையர் தடை விதித்துள்ளார். அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கத்தின் கையில் கோயில்கள் இருக்கும் வரை ஹிந்துக்கள் சுதந்திரமாக மத உரிமையை கடைப்பிடிக்க முடியாது.

இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *