டோனியின் பெயர் வரலாற்றில் இடம் பிடிக்கும்… முதல்வர் ட்வீட்

சென்னை, ஆகஸ்ட்-16

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.டோனியின் ஓய்வு அறிவிப்பை அடுத்து, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘331 சர்வதேசப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தியதற்காகவும், நாட்டிற்காக 3 சாம்பியன்ஷிப்பை வென்ற ஒரே கேப்டனான, ‘கேப்டன் கூல்’ எம்.எஸ்.டோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும். அவரது சாதனைகளும், புகழும் ஒவ்வொரு இந்தியராலும் பேசப்படும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *