உலக கிரிக்கெட் சாம்ராஜ்ஜியத்தின் சரித்திர நாயகன் டோனி.. அமைச்சர் S.P.வேலுமணி புகழாரம்

உலக கிரிக்கெட் சாம்ராஜ்ஜியத்தின் சரித்திர நாயகனாக திகழ்ந்தவர் டோனி என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை, ஆகஸ்ட்-16

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் டோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை நேற்று வெளியிட்டார்.

இந்த நிலையில் டோனியின் ஓய்வு அறிவிப்பு குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்திய தேசத்தின் பட்டித்தொட்டிகளில் எல்லாம் பல கிரிக்கெட் வீரர்கள் உருவாக உந்து சக்தியாக இருந்து, உலக கிரிக்கெட் சாம்ராஜ்ஜியத்தின் சரித்திர நாயகனாக திகழ்ந்தவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும், தமிழ் மண்ணை நேசித்து தமிழ் மக்களின் அபிமான வீரராகவும் திகழ்பவர். நம் தேசத்தின் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் இமயமாய் உயர்ந்த
டோனி, உங்களின் அடுத்தடுத்த முயற்சிகளும் பெரும் வெற்றி பெற ஒரு கிரிக்கெட் ரசிகனாக மனதார வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *