இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 65,000 பேருக்கு கொரோனா..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 25.26 லட்சத்தை கடந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 18.08 லட்சத்தை தாண்டியது.

டெல்லி, ஆகஸ்ட்-15

அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது.

நாட்டில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 65,002 பேர் கொரோனா நோய் தொற்றின் காரணமாக புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 25,26,192 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6,68,220 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 18,08,936 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் மேலும் 2003 உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 49,036 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 71.61% ஆக உயர்ந்துள்ள நிலையில், இறப்பு விகிதம் 1.94% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்கள் விகிதம் 26.45% ஆக குறைந்துள்ளது.

அதேபோல் நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 8 லட்சத்து 68 ஆயிரத்து 679 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இதனால் இந்தியாவில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2 கோடியே 85 லட்சத்து 63 ஆயிரத்து 95 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *