கோவையில் வளர்ச்சிப்பணிகளின் மேம்பாடு குறித்த கலந்தாய்வு கூட்டம்

கோவை, அக்டோபர்-12

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவண்குமார் ஜடாவத் தலைமையில் பொறியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆணையர் ஷ்ரவண்குமார் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், சாலைப்பணிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் குடிநீர்வசதி உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளை மேம்படுத்துவது, நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்களின் செயல்பாடுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆணையர் ஷ்ரவண்குமார் ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதமாகவும், தரமாகவும் விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் மாநகர பொறியாளர், உதவி ஆணையாளர்கள், செயற்பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *