சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியேற்றினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

சென்னை, ஆகஸ்ட்-15

நாட்டின் 74-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை ராஜாஜி சாலையில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அதன்பின்னர் தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *