இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24.61 லட்சத்தை கடந்தது..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 1,007 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 64,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி, ஆகஸ்ட்-14

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக 50 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது.

நாட்டில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 64,553 பேர் கொரோனா நோய் தொற்றின் காரணமாக புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 24,61,190 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6,61,595 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 17,51,555 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் மேலும் 942 உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 47,033 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 70.77% ஆக உயர்ந்துள்ள நிலையில், இறப்பு விகிதம் 1.96% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்கள் விகிதம் 27.27% ஆக குறைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *