நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என தீர்ப்பு

நீதிபதிகள் செயல்பாட்டை சமூக வலைதளத்தில் விமர்சித்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

டெல்லி, ஆகஸ்ட்-14

கொரோனா நோய்த்தொற்று பரவலால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டது தொடா்பான விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. ஆனால், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் விவகாரத்தை உச்சநீதிமன்றம் முறையாக விசாரிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், நீதித்துறைக்கு எதிராக ட்விட்டரில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின் தமைமை நீதிபதி எஸ்.எ. பாப்தே பா.ஜனதா தலைவருடன் இணைந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தது தொடர்பாக ஜூலை 22-ந்தேதி டுவீட் ஒன்று பதிவிட்டிருந்தார்.

இத்தகைய சூழலில், நீதித்துறையை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக பிரசாந்த் பூஷண் மீது உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. பிரசாந்த் பூஷணின் பதிவுகளுக்கு அனுமதி அளித்த ட்விட்டர் நிறுவனத்தின் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமா்வு விசாரணை மேற்கொண்டு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என இன்று தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரங்கள் ஆகஸ்ட் 20-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. மேலும், ஆகஸ்ட் 20-ந்தேதி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு எதிராக பிரசந்த பூஷண் தனது கருத்தை பதிவு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *