மீண்டும் உயரத்தொடங்கிய தங்கம் விலை..சவரனுக்கு ரூ. 280 அதிகரித்து ரூ.40,888-க்கு விற்பனை!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ. 280 உயர்ந்து ரூ. 40,888-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை, ஆகஸ்ட்-14

கொரோனா தொற்றால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும், தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே போனது. கடந்த 7ம் தேதி ஒரு கிராம் ரூ.5,416க்கும் சவரன் ரூ.43,328க்கும் விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை படைத்தது.

இந்த நிலையில் கடந்த 8ம் தேதி முதல் தங்கம் விலை குறைய தொடங்கி உள்ளது. கடந்த 8ம் தேதி ஒரு சவரன் ரூ.43,080, 10ம் தேதி ரூ.42,920, 11ம் தேதி ரூ.41,936க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.5,104க்கும், சவரன் ரூ.40,832க்கும் விற்கப்பட்டது. நேற்றும் 5வது நாளாக தங்கம் விலை குறைந்தது. கிராமுக்கு 28 குறைந்து ஒரு கிராம் ரூ.5076க்கும், சவரனுக்கு ரூ.224 குறைந்து ஒரு சவரன் ரூ.40,608க்கும் விற்கப்பட்டது. கடந்த 5 நாட்களில் மட்டும் சவரன் ரூ.2740 அளவுக்கு குறைந்துள்ளது.
கிடு,கிடுவென உயர்ந்து வந்த தங்கம் விலை சற்று குறைந்து வருவது நகை வாங்குவோரை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் மீண்டும் தங்க விலை உயரத் தொடங்கியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது. இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.40,888-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 35 உயர்ந்து ரூ. 5,111-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 0.30 பைசா உயர்ந்து, ரூ.76.70-க்கு விற்பனை ஆகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *