போகவேண்டாம் மோடி, முதன்முறையாக ட்ரெண்ட் ஆகும் #DontGoBackModi

அக்டோபர்-12

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங்க் இந்தியா வந்திருந்தார். இரு நாட்டு தலைவர்களும் காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் பல விஷயங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினர். புராதான சின்னங்களையும் பார்வையிட்டனர்.

இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு சீன அதிபர் ஜின்பிங்க் நேபாளத்திற்கு புறப்பட்டுச் சென்றார். அவரை தொடர்ந்து பிரதமர் மோடியும் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். இந்த நிலையில், சீன அதிபருடனான சந்திப்புக்கு வந்த பிரதமர் மோடி டெல்லி திரும்பும்போது, #DontGoBackModi என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.

வழக்கமாக மோடி தமிழகத்திற்கு வரும்போது #GoBackModi என்ற ஹேஷ்டாக் தான் டிரெண்ட் ஆகும். மோடியின் வருகையை எதிர்க்கும் சிலர் இந்த ஹேஷ்டாக்கை பயன்படுத்தி ட்விட் செய்வார்கள். ஆனால், வழக்கத்திற்கு மாறாக தற்போது, #DontGoBackModi என்ற ஹேஷ்டாக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *