தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.40,608-க்கு விற்பனை!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.40,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை, ஆகஸ்ட்-13

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த ஜூலை மாத இறுதியில் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை 41 ஆயிரம் ரூபாயைக் கடந்தது.

இந்த நிலையில் 5-வது நாளாக தங்கம் விலை சரிவை சந்தித்து வருவதால் விலை குறைந்து வந்ததால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிலையில் இன்றும், தற்போது 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.40,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.29 குறைந்து ரூ.5,076-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு உயர்ந்து ரூ.76.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *