முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை.. அதிமுக நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை..!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதிமுக நிர்வாகிகள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை, ஆகஸ்ட்-13

தமிழகத்தில் அடுத்த முதல்வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி தேர்வு செய்வார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருந்தார். எடப்பாடி பழனிசாமியே என்றும் முதல்வர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருந்தார். ஆனால், ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்து அல்ல என்றும், தேர்தல் நேரத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்று முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்திருந்தார்.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதிமுக நிர்வாகிகள் இன்று கூடி ஆலோசனை நடத்துகின்றனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம் மற்றும் கே.பி.முனுசாமி மற்றும் மனோஜ் பாண்டியன், அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகமும் பங்கேற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *