விவசாயத்தை போற்றும் ஜெயம் ரவியின் புதிய படம் “பூமி”

அக்டோபர்-12

நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் 25ஆவது படத்திற்கு பூமி என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் விவசாயம் சம்பந்தப்பட்ட படமாகும். அதற்கான அதிகாரபூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர். கடந்த ஆகஸ்டு மாதம் வெளியான கோமாளி படத்தின் வெற்றிக்கு பிறகு லக்ஷ்மன் இயக்கத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அதை விட சிறப்பு என்னவென்றால் இது ஜெயம் ரவியின் 25ஆவது படமாகும். இப்படம் விவசாயம் சம்பந்தப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *