முன்னாள் எம்.பி. ஏ.எம்.வேலு உடல்நலக்குறைவால் காலமானார்

அரக்கோணம் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் ஏ.எம்.வேலு (75) இன்று காலை காலமானார்.

அரக்கோணம், ஆகஸ்ட்-13

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் இருந்து இருமுறை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ.எம்.வேலு, கடந்த 20 தினங்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னை போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, ஏ.எம்.வேலுவிற்கு சில தினங்களுக்கு பின் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அதற்காக சிகிச்சைகளை பெற்று பூரண குணமடைந்த நிலையில் நுரையீரல் தொற்றின் காரணமாக அதே மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று காலை 5.30 மணி அளவில் மருத்துவமனையிலேயே காலமானார். ஏ.எம்.வேலுவின் உடல் சென்னை, போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு மதியம் வைக்கப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். தொடர்ந்து சிலமணி நேரங்களுக்கு பின் சோளிங்கர் மயானத்தில் அவரது இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *