இந்தியாவில் கொரோனா பாதிப்பு 23.96 லட்சத்தை கடந்தது..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 23.96 லட்சத்தை கடந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 16.95 லட்சத்தை தாண்டியது.

டெல்லி, ஆகஸ்ட்-13

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் குணமடைந்தோர் சதவிகிதம் 70.77 ஆகவும், உயிரிழந்தோர் விகிதம் 1.98 ஆகவும், சிகிச்சை பெற்று வருபவர்களின் விகிதம் 27.27 ஆகவும் உள்ளது.

நாட்டில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 66,999 பேர் கொரோனா நோய் தொற்றின் காரணமாக புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 23,96,637 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6,53,622 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 16,95,982 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் மேலும் 942 உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 47,033 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *