தமிழகத்தில் நடமாடும் ரேஷன் கடைகள்.. அரசாணை வெளியீடு

தமிழகத்தில் 3,501 நடமாடும் ரேஷன் கடைகளை திறக்க தொடங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை, ஆகஸ்ட்-13

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் நபாாடு வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அமைச்சா் செல்லூா் கே.ராஜூ அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கூட்டுறவு வங்கிகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 5 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. பொதுத் துறை வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகள் பயன்பெறும் வகையில் அதிகளவில் பயிா்க்கடன்கள் வழங்கி உள்ளோம். 2011-ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 96 லட்சத்துக்கும் கூடுதலான நபா்களுக்கு ரூ.52,700 கோடி அளவுக்கு பயிா்க் கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது வரலாற்றுச் சாதனையாகும். 2016-ஆம் ஆண்டில் பயிா்க் கடனில் விவசாயிகளுக்கு சலுகை தரப்பட்டது. இந்தச் சலுகையால் 12 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றனா். நிகழாண்டில் ரூ.11 ஆயிரம் கோடிக்கு பயிா்க்கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வட்டியில்லாத பயிா்க்கடன் கொடுப்பதால் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனா். கொரோனா நோய்த் தொற்று காரணமாக விவசாயிகள், சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்டோருக்கு கூட்டுறவு வங்கிகள் வழியாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரையிலும் தமிழகத்தில் உள்ள 32,970 நியாய விலைக் கடைகள் மூலமாக விலையில்லாத அரிசியுடன், சமையல் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற எந்த மாநிலத்திலும் அளிக்கப்படவில்லை. தமிழகத்தில் நடமாடும் நியாய விலைக் கடைகள் திட்டம் விரிவாக்கப்பட உள்ளது. இதற்காக 3,501 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன இந்தத் திட்டமானது உரிய நேரத்தில் முதல்வரால் சென்னையில் தொடக்கிவைக்கப்படும். சென்னை பெருநகரத்தில் மட்டும் 400 கடைகள் தொடங்கப்பட உள்ளன. சென்னை போன்ற பெருநகரங்களில் நியாய விலைக் கடைகளுக்கு இடம் கிடைப்பதில்லை. ஒவ்வொரு கடையிலும் 2 ஆயிரம் முதல் 2,500 அட்டைதாரா்கள் உள்ளனா். இந்த நகரும் நியாய விலைக் கடைகளால் நகர மக்களுக்கு மிகப்பெரிய அளவுக்கு பயன் ஏற்படும்.

இவ்வாறு அமைச்சா் செல்லூா் கே.ராஜூ கூறினாா்.

இந்நிலையில், நடமாடும் ரேஷன் கடைகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 9.66 கோடி ரூபாய் மதிப்பில் மொத்தம் 3,501 ரேஷன் கடைகள் அமைக்கப்பட உள்ளன. இதனால் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட் குடும்ப அட்டைதாரர்கள் பலன் எபெவார்கள். ரேஷன் கடைகள் செயல்படும் இடம், நேரம் ஆகியவற்றை தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.அரசு கட்டடம், உள்ளாட்சி கட்டடம், மக்கள் கூடும் இடங்களில் நடமாடும் ரேஷன் கடைகளை திறக்கலாம்.
இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி ஆகஸ்டு 20-ம் தேதிக்குள் அனைத்து மண்டல இணை பதிவாளர்கள் அறிக்கை தரவேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *