திமுகவில் இருந்து மூத்த நிர்வாகிகள் வெளியேறுவார்கள்.. மு.க. அழகிரி அதிரடி
திமுகவில் இருந்து மூத்த நிர்வாகிகள் வெளியேறுவார்கள் மு.க. அழகிரி அதிரடியாக கூறி உள்ளார்.
சென்னை, ஆகஸ்ட்-12

திமுகவில் துணை பொதுசெயலாளராக இருந்த வி.பி. துரைசாமி பாஜகவில் ஐக்கியமாகி திமுகவை அதிர வைத்தார். அதன் பிறகு ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவுடன் நட்பு பாராட்டி வருகிறார். இதற்கு, உதயநிதியும் தலையீடு, ஸ்டாலினின் கண்டு கொள்ளாத, அலட்சியப்படுத்தும் தன்மை ஆகியவையே காரணம் என்று வலுவாக கூறப்படுகிறது.
திமுகவில் இருந்து மேலும் பல மூத்த நிர்வாகிகள் அங்கிருந்து விலகுவார்கள் என்று மு.க. அழகிரி கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: திமுகவில் இருந்து மூத்த நிர்வாகிகள் வெளியேறுவார்கள். அக்கட்சியில் பதவி தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது. சீனியர்கள் பலர் மனம் வெதும்பி போய் உள்ளனர். அவர்களின் விரக்திக்கு பல காரணங்கள் இருக்கின்றன. தேர்தல் முடிந்த பின்னர் திமுக மிக பெரிவை சந்திக்கும் என்று கூறி இருக்கிறார்.
அவரின் இந்த பேட்டி திமுக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.